Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பிரதமர் லீ சியென் லூங், அமைச்சர் ஈஸ்வரனின் பொங்கல் வாழ்த்து

பிரதமர் லீ சியென் லூங் தமது பொங்கல் வாழ்த்துகளை சமூக ஊடகம் வழி தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
பிரதமர் லீ சியென் லூங், அமைச்சர் ஈஸ்வரனின் பொங்கல் வாழ்த்து

(படம்: Lee Hsien Loong /Facebook /MCI Photo by Clement)

பிரதமர் லீ சியென் லூங் தமது பொங்கல் வாழ்த்துகளை சமூக ஊடகம் வழி தெரிவித்துள்ளார்.

பொங்கல் என்னும் அறுவடைத் திருவிழாவைத் தமிழர்கள் நேற்று முன்தினம் முதல் நாளை வரை நான்கு நாட்கள் கொண்டாடும் பண்டிகை என்று திரு லீ கூறினார்.

பண்டிகையின் ஒவ்வொரு நாளும் சிறப்புமிக்கது.

பானையில் பொங்கல் வைக்கும் போது பயன்படுத்தப்படும் பொருள்கள் செழிப்பையும் மகிழ்ச்சியையும் குறிக்கும் என்றார் அவர்.

இரண்டாவது நாளான நேற்று பொங்கல் வைக்கப்படுவது வழக்கம்.

COVID-19 சூழலால் பொங்கல் கொண்டாட்டங்கள் வழக்கம் போல் இல்லாவிட்டாலும் பொங்கல் உணர்வை வழங்கும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகத் திரு. லீ கூறினார்.

லிட்டில் இந்தியாவில் பொங்கல் ஒளியூட்டு, இணையம் மூலம் நடைபெறும் விதவிதமான நடவடிக்கைகளைப் பிரதமர் லீ குறிப்பிட்டார்.

இதற்கிடையில், அமைச்சர் ஈஸ்வரனும் தமது Facebook பக்கத்தில் பொங்கல் வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளார்.

பொங்கலின் முக்கியத்துவத்தை விளக்கியதோடு, சிங்கப்பூர் போன்ற நகர்ப்புறச் சூழலில், கிடைத்ததற்கு நன்றி கூறி, நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்வதற்கான நேரம் இது என்று அவர் கூறினார்.

இவ்வாண்டுப் பொங்கல் கொண்டாட்டம் வழக்கம்போல் இல்லை என்றாலும், இந்திய மரபுடைமை நிலையத்தின் இணையத்தளம் மூலம் பொங்கல் கொண்டாட்ட உணர்வை அனுபவிக்கலாம் என்று அமைச்சர் குறிப்பிட்டார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்