Images
  • sg srilanka
    (படம்: சேனல் நியூஸ்ஏஷியா)

சிங்கப்பூருக்கு முதல்முறை வருகையளித்துள்ள பங்களாதேஷ் பிரதமர்

சிங்கப்பூரும் பங்களாதேஷும், இருதரப்பு உறவையும் வர்த்தகத்தையும் மேம்படுத்தும் இரண்டு இணக்கக் குறிப்புகளில் கையெழுத்திட்டுள்ளன.

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினாவும், பிரதமர் லீ சியென் லூங்கும் அந்தக் கையெழுத்துச் சடங்கைப் பார்வையிட்டனர். 

பங்களாதேஷும், சிங்கப்பூரும், வளர்ச்சிப் பாதையின் வெவ்வேறு தளத்தில் உள்ளன; இருப்பினும், அவை இரண்டும் பொருளியல் செயல்பாட்டில் ஒன்றுக்கொன்று உதவ முடியும் என்று திருவாட்டி ஹசினா கூறினார்.

பங்களாதேஷ் ஊழியர்களுக்குப் பிடித்தமான இடம் சிங்கப்பூர் என்பதை அவர் சுட்டினார்.

சிங்கப்பூர் தொடர்ந்து பங்களாதேஷ் ஊழியர்களுக்கு கண்ணியமான வேலைச் சூழலை வழங்கும் என்று பிரதமர் ஹசினா நம்பிக்கை தெரிவித்தார்.

நாளை மறுநாள் வரை அவர் சிங்கப்பூரில் தங்கியிருப்பார். 

Top