Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரர்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதற்கான யோசனைகளை முன்வைத்துள்ள மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மக்கள் செயல் கட்சி மாநாட்டில் பிரதமர் லீ சியென் லூங் ஆற்றிய உரை பற்றிக் கருத்துத் தெரிவித்த மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிங்கப்பூரர்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதற்கான யோசனைகளை முன்வைத்தனர். 

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரர்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதற்கான யோசனைகளை முன்வைத்துள்ள மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்

(படம்: AFP/Roslan Rahman)

மக்கள் செயல் கட்சி மாநாட்டில் பிரதமர் லீ சியென் லூங் ஆற்றிய உரை பற்றிக் கருத்துத் தெரிவித்த மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிங்கப்பூரர்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதற்கான யோசனைகளை முன்வைத்தனர்.

கண்ணோட்டங்கள் மாறுபட்டிருந்தாலும் கருத்துகளை ஆழமாகவும் விரிவாகவும் கேட்டறிவது அவற்றுள் அடங்கும்.

இயோ சு காங் (Yio Chu Kang) தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் யிப் ஹொன் வெங் (Yip Hon Weng) பல்வேறு தரப்புகளின் எண்ணங்களையும் விருப்பங்களையும் தொடர்ந்து கேட்டறிவது முக்கியம் என்றார்.

எப்படிப்பட்ட சிங்கப்பூரை விரும்புகின்றனர் என்று
தெரிந்துகொண்டு பின்னர் எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து சிங்கப்பூரை முன்னே கொண்டுசெல்ல சரியான கொள்கைகளை வகுக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

மெக்பர்சன் (MacPherson) தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங் (Tin Pei Ling), எல்லா நேரத்திலும் கருத்திணக்கம் ஏற்படாது என்றாலும் ஒருவர் மற்றவரின் நிலையைப் புரிந்துகொள்ளக் கலந்துரையாடல் உதவும் என்றார்.

அந்தப் புரிந்துணர்வு, சிரமமான முடிவை எடுத்தாலும் அது மக்களின் நன்மைக்காகவே என்பதை வெளிப்படுத்த உதவும் என்று அவர் தெரிவித்தார்.

தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் கலாசார, சமூக, இளையர்துறைத் துணையமைச்சருமான திரு. ஆல்வின் டான் (Alvin Tan) வருங்காலம் இளையரைச் சார்ந்துள்ளது என்பதால் அவர்களிடையே நம்பிக்கையை வளர்ப்பது மிக முக்கியம் என்றார்.

அரசியல் பதவி வகிக்கும் தம்மைப் போன்ற இளம் தலைவர்கள் அந்த முயற்சியில் நான்காம் தலைமுறைத் தலைமைத்துவத்துக்கு உதவமுடியும் என்று அவர் தெரிவித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்