Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நடைபாதையில் மின்ஸ்கூட்டர் ஓட்டத் தடை - பிரதமர் லீயைச் சந்திக்க முயன்ற ஓட்டுநர்கள்

நடைபாதைகளில் மின்ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு எதிரான தடை குறித்து அதிருப்தி தெரிவிக்க, சுமார் 50 மின் ஸ்கூட்டர் ஓட்டுநர்கள், அங் மோ கியோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் மக்கள் சந்திப்புக் கூட்டத்துக்குச் சென்றிருந்தனர்.

வாசிப்புநேரம் -

மக்கள் சந்திப்புக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.

அவர்களில் பெரும்பாலோர் GrabFood விநியோக ஓட்டுநர்கள்.

டெக் கீ தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரதமர் லீ சியென் லூங்கை அவர்கள் சந்திக்கத் திட்டமிட்டிருந்தனர்.

இரவு 8 மணிக்குத் தொடங்கவிருந்த மக்கள் சந்திப்புக் கூட்டத்துக்காக, மாலை 6 மணிக்கே சில மின் ஸ்கூட்டர் ஓட்டுநர்கள் திரண்டனர்.

அந்த ஓட்டுநர்களின் பிரதிநிதி ஒருவர், மக்கள் சந்திப்புக் கூட்டத்தின் தொண்டூழியர் ஒருவரைச் சந்தித்துப் பேசினார்.

மற்றோர் ஓட்டுநர், அந்தத் தொகுதிக்கான அடித்தள ஆலோசகர் டாக்டர் எஸ். வாசுவைச் சந்தித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்