Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

16 வயதிற்குட்பட்டவர்களுக்கு தனிநபர் நடமாட்டச் சாதனங்களை இனி பெரிய கடைகள் விற்கப் போவதில்லை

சிங்கப்பூரில் இனி 16 வயதிற்குட்பட்டவர்கள் தனிநபர் நடமாட்டச் சாதனங்களை வாங்குவதில் சிரமத்தை எதிர்நோக்குவார்கள்.

வாசிப்புநேரம் -
16 வயதிற்குட்பட்டவர்களுக்கு தனிநபர் நடமாட்டச் சாதனங்களை இனி பெரிய கடைகள் விற்கப் போவதில்லை

(படம்: CNA)


சிங்கப்பூரில் இனி 16 வயதிற்குட்பட்டவர்கள் தனிநபர் நடமாட்டச் சாதனங்களை வாங்குவதில் சிரமத்தை எதிர்நோக்குவார்கள்.

பெரியவர்களின் துணையின்றி கடைக்கு வரும் இளையர்களிடம் தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் விற்பதைத் தடைசெய்ய 27 கடைக்காரர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

அதோடு சாதனங்களின் மின்னியல் கட்டமைப்பைப் பாதிக்கக்கூடிய மாற்றங்கள் ஏதும் செய்யமாட்டார்கள் என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

கடைக்காரர்கள் அறிவித்துள்ள இந்த மாற்றங்கள் உடனடியாக நடப்புக்கு வரும்.

அண்மையில் தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தொடர்பான விபத்துகளும் தீச்சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

அதனால் அவற்றின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே கவலை அதிகரித்துள்ளது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்