Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தொடர்பான தீச்சம்பவங்கள் இருமடங்காயின

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தொடர்பான தீச்சம்பவங்கள் இருமடங்காயின 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தொடர்பான தீச்சம்பவங்கள் கிட்டத்தட்ட இரட்டிப்பானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய சம்பவங்களில் காயமடைந்தோர் எண்ணிக்கையும் சென்ற ஆண்டு கூடியது.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை இன்று வெளியிட்ட வருடாந்தரப் புள்ளிவிவர அறிக்கையில் அந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

சென்ற ஆண்டு தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் சம்பந்தப்பட்ட 102 தீச்சம்பவங்கள் பதிவாயின.

2018ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 52.

2015ஆம் ஆண்டு அத்தகைய ஒரு சம்பவம் மட்டுமே பதிவானதாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

சென்ற ஆண்டின் தீச்சம்பவங்களில் தொடர்புடைய தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் அனைத்தும் பாதுகாப்புத் தரநிலைச் சான்றிதழ் பெறாதவை.

இந்நிலையில், மின்-சைக்கிள்கள் தொடர்பான தீச்சம்பவங்கள் சென்ற ஆண்டு குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு அத்தகைய 13 சம்பவங்கள் பதிவாயின;
2018இல் அந்த எண்ணிக்கை 22.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்