Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தனிநபர் நடமாட்டச் சாதனத் தடையை மீறுவோருக்கு 5,000 வெள்ளி வரை அபராதம்: PAP நகர மன்றங்கள்

வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடிக் குடியிருப்புகளின் கீழ்த்தளத்தில் தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்டிருக்கும் தடையை மீறுவோருக்கு 5,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: 2 நிமிடத்திற்குள்)

வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடிக் குடியிருப்புகளின் கீழ்த்தளத்தில் தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்டிருக்கும் தடையை மீறுவோருக்கு 5,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.

மக்கள் செயல் கட்சி நிர்வகிக்கும் நகர மன்றங்கள் இன்று அதனைத் தெரிவித்தன.

அந்தத் தடை நேற்று நடப்புக்கு வந்தது.

மின்-ஸ்கூட்டர்கள், சறுக்குப் பலகைகள், சைக்கிள்கள் ஆகியவற்றைக் குடியிருப்புகளின் கீழ்த்தளங்களிலும், வீடமைப்புப் பேட்டைகளின் மற்ற பொது இடங்களிலும் பயன்படுத்த மக்கள் செயல் கட்சியின் 15 நகரமன்றங்கள் தடை விதித்துள்ளன.

தனிநபர் நடமாட்டச் சாதனச் சட்டத்தின்கீழ், அனுமதிக்கப்பட்ட பொதுப் பாதைகளுக்கு அந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

அதேவேளையில், இயந்திரம் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகள் போன்ற தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனங்களுக்கும் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளுக்கு உடன்பட பயனீட்டாளர்களுக்கு 2 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 31ஆம் தேதி வரை அவ்வாறு அவகாசம் அளிக்கப்பட்டிருப்பதாய் மக்கள் செயல் கட்சி நகரமன்றங்களின் ஒருங்கிணைப்புத் தலைவரான டாக்டர் தியோ ஹோ பின் (Teo Ho Pin) தெரிவித்தார்.

பொறுப்பின்றி தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்துவோரை அடையாளங்காண 70,000 காவல்துறைக் கேமராக்களும் கண்காணிப்புக் கேமராக்களும் உதவும் என்றார் அவர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்