Images
  • bicycle
    (படம்: Najeer Yusof/Today)

புதிய PMD விதிமுறைகள்: இனி பிள்ளைகள் வீடுகளின் கீழ்த்தளத்தில் சைக்கிள் ஓட்டமுடியாதா?

மின்-ஸ்கூட்டர்கள், சறுக்குப் பலகைகள், சைக்கிள்கள், தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் ஆகியவற்றை தடை செய்யப்பட்ட இடங்களில் பயன்படுத்துவோருக்கு 5,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.

நவம்பர் முதல் தேதியிலிருந்து அபராதங்கள் விதிக்கப்படும். தற்போது இரண்டு மாதங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

ஆனால் தற்போது பெற்றோருக்கு அதன் தொடர்பில் பல கேள்விகள் எழுந்துள்ளன.

- நான் எனது பிள்ளைக்கு கீழ்த்தளத்தில் சைக்கிள் ஓட்டக் கற்றுத்தரலாமா?

- எங்கள் பிள்ளைகள் இனி விளையாட்டு ஸ்கூட்டர்களைக் கீழ்த்தளத்தில் பயன்படுத்தக்கூடாதா?

Today இணையத்தளம் இதன் தொடர்பில் நகர மன்றங்களை விசாரித்தது.

நகர மன்றங்களின் பதில்கள்

  • விதிமுறை பேட்டைக்குப் பேட்டை மாறுபடும்.
  • பாதுகாப்புக்குப் பிரச்சினை இல்லை என்று நினைத்தால், நகர மன்றங்கள் விதிமுறைகளைச் சற்று தளர்த்தலாம்.
  • பொதுவாக பிள்ளைகள் பயன்படுத்தும் சிறிய சக்கரங்களைக் கொண்ட விளையாட்டு நகரும் சாதனங்களுக்குத் தடை பொருந்தாது.
  • தெம்பனீஸ் நகரமன்றத்தில் பெரியவர்கள் துணையுடன் பிள்ளைகளுக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுப்பது தவறாகாது.
  • நீ சூன் நகர மன்றத்தைப் பொறுத்தவரை, கீழ்த்தளங்களிலும், பொது இடங்களிலும் ஒருபோதும் சைக்கிள் ஓட்டக்கூடாது.
  • எல்லா இடங்களிலும் உடற்குறையுள்ளோர் பயன்படுத்தும் சக்கரங்கள் கொண்ட கருவிகளுக்கு எந்தத் தடையும் இல்லை.
  • நகர மன்றங்களைப் பொறுத்தவரை பாதுகாப்புக்கே முன்னுரிமை.
  • புதிய விதிமுறை குறித்துக் குடியிருப்பாளர்களுக்கு எல்லா வகைகளிலும் விளக்கமளிப்பதில் நகர மன்றங்கள் கவனம் செலுத்திவருகின்றன.  
Top