Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19 தடுப்பு மருந்து, ivermectin குறித்து பொய்த் தகவல் - Truth Warriors இணையத்தளத்திற்குத் திருத்த உத்தரவு

இணையவழிப் பொய்ச்செய்திக்கு எதிரான POFMA சட்டத்தின்கீழ் Truth Warriors இணையத்தளத்திற்குத் திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
COVID-19 தடுப்பு மருந்து, ivermectin குறித்து பொய்த் தகவல் - Truth Warriors இணையத்தளத்திற்குத் திருத்த உத்தரவு

(படம்: AP/Ted S Warren)

இணையவழிப் பொய்ச்செய்திக்கு எதிரான POFMA சட்டத்தின்கீழ் Truth Warriors இணையத்தளத்திற்குத் திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகளின் செயல்திறன், கொரோனா கிருமித்தொற்றுச் சிகிச்சைக்கு ivermectin மருந்தைப் பயன்படுத்துவது குறித்த செய்திகளின் தொடர்பில் திருத்த உத்தரவு பிறப்பிக்குமாறு POFMA அலுவலகத்திற்கு சுகாதார அமைச்சர் பணித்துள்ளார்.

மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ள பெரும்பாலான நாடுகளில் கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கையும், மரணமடைவோர் விகிதமும் அதிகமாய் இருப்பதாக Truth Warriors இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. ஆனால், ஆக அண்மைப் புள்ளிவிவரங்கள் அதை உறுதிப்படுத்தவில்லை என்று சுகாதார அமைச்சு தெளிவுபடுத்தியது.

தடுப்புமருந்துகள் COVID-19 பரவலைத் தடுக்கவில்லை என்றும் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோரை விடத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மூலம் கிருமி பரவும் சாத்தியம் குறைவு என்று அமைச்சு சுட்டியது.

Ivermectin - கிருமித்தொற்றைத் தடுப்பதாகவும், கர்ப்பிணிகளுக்கும் அந்த மருந்து பாதுகாப்பானது என்றும் Truth Warriors குறிப்பிட்டுள்ளது.

ஆனால், கிருமித்தொற்றுச் சிகிச்சைக்கு அந்த மருந்து அங்கீகரிக்கப்படவில்லை என்பதை சுகாதார அமைச்சு தெளிவுபடுத்தியது. சுயமாக அந்த மருந்தை எடுத்துக் கொண்டால் அது உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கலாம் என்றும் அமைச்சு கூறியது.

தவறான செய்திகள் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பக்கத்திலும், Truth Warriors இணையத்தளம் திருத்தம் வெளியிட வேண்டும்.

தவறான செய்திகள் வெளியிடப்பட்டதைக் கடுமையாகக் கருதுவதாகத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு, அது பற்றிக் குற்றப் புலனாய்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்