Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கேலி செய்யும் தொனியில் உள்ள தகவல்கள் பொய்ச் செய்திகளுக்கான சட்டத்தில் அடங்கமாட்டா: அமைச்சர் சண்முகம்

கேலி செய்யும் தொனியில் குறிப்பிடப்படும் தகவல், பொய்ச் செய்திகளுக்கு எதிரான சட்டத்தின்கீழ் வருகிறது எனக் குறிப்பிடுவது தவறு எனச் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -

கேலி செய்யும் தொனியில் குறிப்பிடப்படும் தகவல், பொய்ச் செய்திகளுக்கு எதிரான சட்டத்தின்கீழ் வருகிறது எனக் குறிப்பிடுவது தவறு எனச் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.

கேலி செய்யும் தொனியில் குறிப்பிடப்படும் தகவல், பொய்த் தகவல்களில் சேரும் என ஊடக அறிவாற்றல் மன்றம் அண்மையில் அதன் Facebook பதிவில் குறிப்பிட்டிருந்தது.

பிறகு அந்தக் குழப்பத்துக்கு அது மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

அது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் சண்முகம் பதிலளித்தார்.

கேலி செய்யும் தொனியில் குறிப்பிடப்படும் தகவலை, ஊடக அறிவாற்றல் மன்றம் அவ்வாறு வகைப்படுத்தியதில் தவறு செய்ததாக அவர் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்