Images
  • hacker
    (கோப்புப் படம்: REUTERS/Kacper Pempel/Illustration)

ஆஸ்திரேலியத் தூதரகத்தின் வெளியே ஆர்ப்பாட்டம் - சிங்கப்பூர்க் காவல்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கை

சிங்கப்பூர்க் காவல்துறை, ஆஸ்திரேலியத் தூதரகத்தின் வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிடுவது தொடர்பான Twitter பதிவு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

@watermelonsalt5 என்ற Twitter கணக்கில், சிங்கப்பூரில் உள்ள ஆஸ்திரேலியத் தூதரகத்தின் முன்னால் நாளை (10 ஜூன்) ஆர்ப்பாட்டம் இடம்பெறும் என்று குறிப்பிடப்பட்டிருப்பது குறித்துத் தகவல் அறிந்ததாகக் காவல்துறை சொன்னது.

சிங்கப்பூர்க் காவல்துறையிடம் அதற்கான ஒப்புதல் பெற்றதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தத் தகவல்கள் உண்மையல்ல என்றும், காவல்துறைக்கு ஆர்ப்பாட்டத்தின் தொடர்பில் எந்தத் தகவலும் அளிக்கப்படவில்லை என்றும் காவல்துறை அறிக்கையில் குறிப்பிட்டது.

அனுமதியின்றி பொதுக் கூட்டம் நடத்துவதோ, அதில் கலந்துகொள்வதோ பொது ஒழுங்குச் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.

வெளிநாட்டு அரசியல் விவகாரங்கள் தொடர்பிலான கூட்டங்களை நடத்த சிங்கப்பூர் அனுமதி வழங்காது என்றும் காவல்துறை வலியுறுத்தியது.

வெளிநாட்டிலிருந்து வந்து சிங்கப்பூரில் வசிப்பவர்கள் இங்குள்ள சட்டங்களைப் பின்பற்றவேண்டும் என்றும் காவல்துறை தெரிவித்தது.
 

Top