Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உடல்பிடிப்பு நிலையங்களை முறையான உரிமமின்றி நடத்திய சந்தேகத்தின் பேரில் 41 வயது மாது கைது

இயோ சூ காங் ரோட்டிலுள்ள சில உடல்பிடிப்பு நிலையங்கள் முறையான உரிமம் இன்றி செயல்பட்டுவந்ததில் சம்பந்தப்பட்டிப்பதாகச் சந்தேகிக்கப்படும் 41 வயது மாதைக் காவல்துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
உடல்பிடிப்பு நிலையங்களை முறையான உரிமமின்றி நடத்திய சந்தேகத்தின் பேரில் 41 வயது மாது கைது

(கோப்புப் படம்: Jeremy Long)

இயோ சூ காங் ரோட்டிலுள்ள சில உடல்பிடிப்பு நிலையங்கள் முறையான உரிமம் இன்றி செயல்பட்டுவந்ததில் சம்பந்தப்பட்டிப்பதாகச் சந்தேகிக்கப்படும் 41 வயது மாதைக் காவல்துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

ஒரே கட்டடத்தில் இருந்த 7 இடங்களை, அந்தப் பெண் நிர்வகித்து வந்ததாக நம்பப்படுகிறது.

அங்கு முறையான உரிமமின்றி, உடல்பிடிப்புச் சேவை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

உடல் பிடிப்புச் சேவைக்கான 13 கட்டில்கள், 16 நாற்காலிகள் போன்றவை, சட்ட அமலாக்க நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். விசாரணை தொடர்கிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 10,000 வெள்ளி வரையிலான அபராதமோ, ஈராண்டு வரையிலான சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.

மீண்டும் மீண்டும் அத்தகைய குற்றம் புரிவோருக்கு அதிகபட்சமாக 20,000 வெள்ளி அபராதமோ ஐந்தாண்டு வரையிலான சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்