Images
  • police car stuck (1)
    (படம்: Facebook / ROADS.sg)

படிகளில் சிக்கிக்கொண்ட காவல்துறைக் கார்

பாதையைத் தவறுதலாகக் கணக்கிட்டதால், காவல்துறை அதிகாரியின் கார், படிகளில் சிக்கிக்கொண்டது.

அந்தக் கார் படிகளில் சிக்கிக்கொண்ட படங்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ளப்பட்ட பின், சிங்கப்பூர்க் காவல்துறை அது குறித்து இன்று (நவம்பர் 8) விளக்கமளித்தது.

சம்பவம் குறித்துப் புதன்கிழமை மாலை 5.25 மணியளவில் தகவல் வந்ததாக Facebook பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

SG Road Vigilante எனும் Facebook பக்கம் அந்தப் படத்தை முதலில் பதிவுசெய்தது.

அதன் பிறகு அந்தப் படம் ஆயிரம் தடவைக்கு மேல் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

காரை ஓட்டிய அதிகாரி, பாதையைத் தவறுதலாகக் கணக்கிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.




 

Top