Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பக்கத்து வீட்டுக்காரர் பூஜை செய்யும்போது வேண்டுமென்றே சத்தம்போட்டு இடையூறு செய்ததாக நம்பப்படும் பெண்ணிடம் விசாரணை

பக்கத்து வீட்டுக்காரர் பூஜை செய்துகொண்டிருந்தபோது, வேண்டுமென்றே ஓசையெழுப்பித் தொந்தரவுசெய்ததாக நம்பப்படும் சம்பவத்தின் தொடர்பில், காவல்துறை விசாரணை தொடங்கியுள்ளது. 

வாசிப்புநேரம் -

பக்கத்து வீட்டுக்காரர் பூஜை செய்துகொண்டிருந்தபோது, வேண்டுமென்றே ஓசையெழுப்பித் தொந்தரவுசெய்ததாக நம்பப்படும் சம்பவத்தின் தொடர்பில், காவல்துறை விசாரணை தொடங்கியுள்ளது.

இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வரும் காணொளியில், 48 வயதுப் பெண் ஒருவர், அவரது பக்கத்து வீட்டுக்காரர் மணியடித்து பூஜையில் ஈடுபட்டிருந்த வேளையில், வேண்டுமென்றே காங் (Gong) என்னும் வெண்கலத் தட்டைத் தட்டி ஒலியெழுப்பி இடையூறு செய்வது தெரிகிறது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட திரு. லிவனேஷ் ராமு, அந்தக் காணொளியை, Facebookஇல் பதிவேற்றினார்.

பெரும்பாலான மற்ற இந்துக்களைப் போல், தம்முடைய வீட்டில் வாரத்திற்கு இரு முறை 5 நிமிட வழிபாடு இடம்பெறும் என்று அவர் தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

தொந்தரவு செய்ததாக நம்பப்படும் பெண் மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் பெண், விசாரணையில் உதவி வருகிறார்.

தாமும் தமது குடும்பத்தாரும் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் திரு. லிவனேஷ், இன்னொரு Facebook பதிவில் தெரிவித்தார்.

விசாரணை குறித்த முடிவு வெளிவரும்வரை தமது பக்கத்து வீட்டுக்காரரின் நடவடிக்கை பற்றி எதையும் ஊகமாகத் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் திரு. லிவனேஷ் குறிப்பிட்டார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்