Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பெண்களின் உள்ளாடைத் திருட்டு-காவல்துறை விசாரணை

புக்கிட் பாத்தோக் கழக வீட்டுப் பகுதியில் பெண்களின் உள்ளாடைகளை ஓர் ஆடவர் திருடியிருக்கிறார். சம்பவம் சென்ற வியாழக்கிழமை (பிப்ரவரி 22) நடந்தது. அதுகுறித்துக் காவல்துறைக்கு மாலை சுமார் 6 மணியளவில் தகவல் கிடைத்தது.

வாசிப்புநேரம் -
பெண்களின் உள்ளாடைத் திருட்டு-காவல்துறை விசாரணை

படம்: Facebook/Li Jianbin

புக்கிட் பாத்தோக் கழக வீட்டுப் பகுதியில் பெண்களின் உள்ளாடைகளை ஓர் ஆடவர் திருடியிருக்கிறார். சம்பவம் சென்ற வியாழக்கிழமை (பிப்ரவரி 22) நடந்தது. அதுகுறித்துக் காவல்துறைக்கு மாலை சுமார் 6 மணியளவில் தகவல் கிடைத்தது.

புக்கிட் பாத்தோக் செண்டிரல், புளோக் 106-இல் உடைமைகள் திருடப்பட்டதாகப் புகார் செய்யப்பட்டது. சில உள்ளாடைகள் திருடப்பட்டதாக சேனல் நியூஸ் ஏஷியா அறிகிறது. சம்பவம் குறித்த காணொளி லீ ஜியான்பின் என்பவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

கண்ணாடியணிந்த சிவப்புநிற டி சட்டையில் காணப்பட்ட ஓர் ஆடவர் வீட்டுக்கு வெளியே நடைபாதையில் நடந்துகொண்டிருந்ததைக் காணொளி காட்டியது.

துணி காயவைக்கப்பட்டிருந்த இடத்தைக் கடந்துசென்றபோது குனிந்து உள்ளாடைகளை எடுத்திருக்கிறார் அவர். மேலும் ஒரு காணொளி அதே ஆடவர் நீலநிறச் சட்டையணிந்து திரும்பிவந்ததைக் காட்டியது.

முன் போலவே துணி காயவைக்கப்பட்டிருந்த இடத்தில் அவர் அதே வேலையைச் செய்தது தெரியவந்தது. சம்பவம் மாலை சுமார் 4 மணிக்கு நடந்ததாகக் காணொளியில் பதிவுசெய்யப்பட்டிருந்தது.

இதுபோல் தமது வீட்டில் நடப்பது ஐந்தாவது முறை என்று திரு லீ தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார். இதுவரை ஆடவர் பிடிபடவில்லை என்றார் அவர்.

ஒரு குறிப்பிட்ட வகையான உள்ளாடைகளையே ஆடவர் தெரிவுசெய்து திருடுவதாகத் திரு லீ கூறினார். காவல்துறையின் விசாரணை தொடர்கிறது. ஆடவரின் அடையாளம் வெளியிடப்படவில்லை என சேனல் நியூஸ் ஏஷியா அறிகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்