Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

போக்குவரத்துக்கு எதிர்த் திசையில் வாகனத்தைச் செலுத்திய பெண்ணின்மீது விசாரணை

அப்பர் கிராஸ் ஸ்டிரீட்டில் சாலை போக்குவரத்துக்கு எதிர்த் திசையில் வாகனத்தைச் செலுத்திய 32 வயது பெண் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
போக்குவரத்துக்கு எதிர்த் திசையில் வாகனத்தைச் செலுத்திய பெண்ணின்மீது விசாரணை

படம்: Facebook Screengrab

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

அப்பர் கிராஸ் ஸ்டிரீட்டில் சாலை போக்குவரத்துக்கு எதிர்த் திசையில் வாகனத்தைச் செலுத்திய 32 வயது பெண் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

சாலை போக்குவரத்துக்கு எதிர்த் திசையில் வாகனத்தைச் செலுத்தும் காணொளி Singapore Road Accident Facebook பக்கத்தில் நேற்று பதிவேற்றப்பட்டது.

Chinatown Point அருகே மக்கள் நடந்து செல்லும் பாதையில் கார் நிற்பதும் அங்கிருந்து வெளியேறிய பெண் அருகிலிருப்பவரைத் தகாத வார்த்தைகளால் திட்டுவதும் காணொளியில் பதிவாகிருந்தது.

பிறகு அந்தப் பெண் மீண்டும் வாகனத்திற்குச் சென்று போக்குவரத்துக்கு எதிர்த் திசையில் செல்லத் தொடங்கினார்.

பெண்ணின் செயல் குறித்து Facebook பதிவில் பலர் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர். அந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்