Images
  • yishun
    படம்:  Google Street View

துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் காவல்துறை அதிகாரி மரணம்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

28 வயது ஆண் காவல்துறை அதிகாரி, தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் காணப்பட்டதாகச் சிங்கப்பூர்க் காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்தச் சம்பவம் 31 யீஷூன் செண்ட்ரலில் அமைந்துள்ள யீஷூன் நார்த் அக்கம்பக்கக் காவல்துறை நிலையத்தில் நடந்தது.

ஞாயிற்றுக்கிழமை அந்த அதிகாரி பணிக்காக காலை 7.30 மணிக்கு வந்தார். வழக்கம் போல் ஆயுதக் கிடங்கிலிருந்து தனது துப்பாக்கியை அவர் எடுத்தார்.

பின்னர் காலை 9.30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் நிலையத்தின் ஓய்விடத்தில் காணப்பட்டார். அவரின் பக்கத்தில் துப்பாக்கி கிடந்தது. சுயநினைவின்றி கூ டெக் புவாட் மருந்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மாண்டார்.

இயற்கைக்கு மாறான மரணம் எனக் காவல்துறையினர் அதனை வகைப்படுத்தியுள்ளனர். அதில் சூது ஏதும் இருப்பதாக அவர்கள் சந்தேகிக்கவில்லை. குற்றப் புலனாய்வுப் பிரிவு அந்தச் சம்பவத்தை விசாரித்து வருகிறது.


Top