Images
  • funan theft
    (படம்: Singapore Police Force/Public Affairs Department)

திருட்டுச் சம்பவம் தொடர்பாக ஆடவரைத் தேடும் காவல்துறையினர்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

Funan கடைத்தொகுதியில் கடந்த ஜுன் மாதம் நடந்த திருட்டுச் சம்பவத்தின் தொடர்பில் சந்தேக நபரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கடைத்தொகுதியில் ஜூன் மாதம் 29ஆம் தேதி திருட்டுச் சம்பவம் நடந்ததாகவும் விசாரணைக்காக அந்த ஆடவர் தேடப்படுவதாகவும் காவல்துறை தெரிவித்தது.

சந்தேக நபரின் படத்தைக் காவல்துறை வெளியிட்டுள்ளது.

ஆடவர் தொடர்பான தகவல் தெரிந்தால் 1800-255-0000 என்ற காவல்துறையின் அவசர எண்ணிற்கு அழைக்கலாம் அல்லது www.police.gov.sg/iwitness எனும் இணையப்பக்கத்தில் தகவலைப் பதிவு செய்யலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும் என்று காவல்துறை கூறியது.

Top