Images
  • lazada
    படம்: REUTERS/Thomas White/Illustration

போலி Lazada பரிசு மோசடி குறித்து காவல்துறையினர் எச்சரிக்கை

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூர்க் காவல்துறையினர், போலி Lazada பரிசு விளம்பர மோசடிகள் குறித்து எச்சரித்துள்ளனர்.

மோசடிகளின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது 14,000 வெள்ளியை இழந்தனர்.

ஜனவரியிலிருந்து இதுவரை அத்தகைய குறைந்தது 14 சம்பவங்கள் புகார் செய்யப்பட்டன.

மோசடி நபர்கள்  Instagramஇல்  மற்றொருவரைப் போல பாவனை செய்வர். பின்னர் மோசடி நபர்கள் அவர்களின் தொடர்பு எண்ணைக் கோருவர்.

கடன்பற்று அட்டை அல்லது ரொக்க அட்டையின் படங்களைப் பெற்று Lazada விளம்பரங்களுக்குப் பதிவுசெய்ய உதவுவதாகக் கூறுவர்.   அதன்மூலம் ரொக்கத்தை வெல்ல முடியும் என்றும் ஆசைகாட்டுவர்.  

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளுக்கான ஒருமுறை கடவுச்சொல்லையும் மோசடி நபர்கள் பெற்றுக்கொள்வர்.

இப்படி மோசடி செய்து உரிமமில்லாத பரிவர்த்தனைகள் நடத்தப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

பொதுமக்கள் தங்களின் சொந்த விவரங்களை அடையாளம் தெரியாத நபர்களிடம் வழங்கவேண்டாம் என்று அவர்கள் நினைவூட்டினர்.


Top