Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

லொம்போக் நிவாரணத்துக்கு நிதி திரட்டிய நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி

லொம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் நிவாரண நிதிக்காக, நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி (Ngee Ann Polytechnic) விரிவுரையாளர்கள் 20,000 வெள்ளி திரட்டியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
லொம்போக் நிவாரணத்துக்கு நிதி திரட்டிய நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி

(படம்: Ngee Ann Polytechnic )

லொம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் நிவாரண நிதிக்காக, நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி (Ngee Ann Polytechnic) விரிவுரையாளர்கள் 20,000 வெள்ளி திரட்டியுள்ளனர்.

செப்டம்பர் 3 ஆம் தேதிக்குள் 10,000 வெள்ளி திரட்ட அவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் வந்துகுவிந்த தொகையோ 20,000 வெள்ளி!

சமூக வலைத்தளங்கள் மூலம் நிதி திரட்டப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் கல்லூரி, லொம்போக் தீவில் இளையர்களுக்கான பயணத்திட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.

அப்போது தீவில் இருந்த மக்களுடன் மாணவர்களுக்கும், விரிவுரையாளர்களுக்கும் நல்ல பிணைப்பு ஏற்பட்டது. அங்கிருந்தோருடன் தொடர்ந்து தகவல் பரிமாற்றமும் இருந்துவந்தது.

தற்போது நில நடுக்கம் குறித்த செய்தி மாணவர்களையும், விரிவுரையாளர்களையும் பரிதவிக்க வைத்தது.

லொம்போக் தீவை உலுக்கிய நிலநடுக்கத்தில் சுமார் 70ஆயிரத்துக்கும் அதிகமானோர் வீடின்றித் தவிக்கின்றனர்.

"நாங்கள் அளிக்கும் தொகை சிறியதாக இருந்தாலும், ஏதோ ஒரு விதத்தில் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்"

என்று மனம் உருகினர் மாணவர்கள்.

வேறு எந்த விதத்தில் லொம்போக்வாசிகளுக்கு உதவலாம் என்பதை ஆராய்ந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்