Images
  • Pongal
    ( படம்: இந்திய மரபுடைமை நிலையம் )

இந்திய மரபுடைமை நிலையத்தில் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு

இந்திய மரபுடைமை நிலையம் ஜனவரி 19 ,20 ஆகிய தேதிகளில் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.

ஜனவரி 19 ஆம் தேதி காலை 12 மணியளவில் தொடங்கவுள்ள பொங்கல் கொண்டாட்டம் மாலை 7 மணிவரை நடைபெறும்.

அன்று இந்தியப் பாரம்பரிய நடனம், ஓவியப் பயிலரங்கு போன்ற நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

ஜனவரி 20 ஆம் தேதி காலை 10 மணியளவில் தொடங்கும் பொங்கல் கொண்டாட்டம் மாலை 4 மணியவில் முடிவுக்குவரும்.

அனுமதி இலவசம்.

தேசிய மரபுடைமைக் கழகம், கலாசார, சமூக இளையர் அமைச்சு, LISHA எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மரபுடைமைச் சங்கம் ஆகியன இணைந்து கொண்டாட்டங்களை நடத்துகின்றன.

Top