Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இவ்வாண்டுப் பொங்கல்... கொண்டாட்டங்களில் மாற்றங்கள்?

கொரோனா கிருமிப்பரவல் சூழலில் விழாக்களும் கொண்டாட்ட  நிகழ்ச்சிகளும் வேறுவிதமாக இடம்பெற்று வருகின்றன.

வாசிப்புநேரம் -

கொரோனா கிருமிப்பரவல் சூழலில் விழாக்களும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் வேறுவிதமாக இடம்பெற்று வருகின்றன.

கட்டுப்பாடுகளின் மத்தியில் கொண்டாடுவதா? - எனப் பலரும் யோசிப்பது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை சிங்கப்பூரில் எவ்வாறு கொண்டாடப்படும் என்ற கேள்வி நிலவியது.

அதற்கான பதிலைக் கண்டறிய, லிட்டில் இந்தியாவிலுள்ள பொங்கல் சந்தையில் சிலரிடம் பேசியது, 'செய்தி'.

மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டின் பொங்கல் விழா எவ்வாறு அமைந்துள்ளது?

மேகநாதன்:

இந்த ஆண்டு சற்று வேறுபட்டிருக்கிறது. நோய்ப்பரவல், மழைக்காலம்... இவற்றினால் தேவையானவற்றைச் செய்ய சற்று கடினமாகவே உள்ளது. வேலை முடிந்து தேக்காவுக்குச் செல்வதற்குக் களைப்பாகவே இருக்கிறது.

கொண்டாட்ட உணர்வு குறைந்துள்ளது. முகக்கவசம் அணியவேண்டும் என்பதால், பிறரிடம் பேசி மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை

சரஸ்வதி:

எனக்கு அதில் எந்த மாற்றமும் தெரியவில்லை. ஒவ்வோர் ஆண்டும் பொங்கலை வீட்டில் கொண்டாடுவதால் வழக்கம் போலவே பண்டிகை நடைபெறும் என நம்புகிறேன்

உமா:

இவ்வாண்டின் பொங்கல் சற்று அமைதியாக இருக்கும் என நம்புகிறேன். ஆனால், கடைகளுக்குச் செல்லும்போது அந்தப் பரபரப்பு தெரிகிறது... அவ்வாறு கடைகளுக்குச் செல்லும்போது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்யவேண்டும்

திருநாவுக்கரசு:

கொண்டாட்டம் குறையாமல் இருக்கிறது. நமக்குத் தேவையான பொருள்கள் இங்குக் கடைகளில் கிடைக்கின்றன. இந்தியாவிலிருந்து நமக்குத் தேவையானவை இங்கும் கிடைக்கின்றன. பலரை இந்தக் கடைத்தொகுதியில் காண்பதில் எனக்கு மகிழ்ச்சி

இவ்வாறு சிலர் பொங்கல் கொண்டாட்டங்களில் எந்தவித மாற்றங்களும் இல்லை எனக் கூறினர். சிலரோ, மாற்றங்கள் பலவற்றை எதிர்கொள்ள வேண்டிய நிலையைப் பகிர்ந்துகொண்டனர்.

எதுவாக இருப்பினும், பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாட, 'செய்தி'யின் பொங்கல் நல்வாழ்த்துகள்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்