Images

பொங்கல் பண்டிகை உணர்வை மேலோங்கச் செய்யப் பாரம்பரிய தமிழர் நடனங்களுடன் சிறப்புப் பாடல் காணொளி

பொங்கல் திருநாளை வரவேற்க மக்கள் தயாராகும் வேளையில், பண்டிகை உணர்வை மேலோங்கச் செய்ய சிறப்புப் பாடல் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது இந்திய மரபுடைமை நிலையம்.

பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், கரகாட்டம் போன்ற பாரம்பரிய நடனங்கள் காணொளியில் இடம்பெறுகின்றன.


சிங்கப்பூர், மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களின் கூட்டு முயற்சியில் தயாரான பாடலுக்குக் குரல் கொடுத்துள்ளனர், உள்ளூர் பிரபலங்கள் இளமாறன், சங்கீதா.

சமூக ஊடகங்கள் வழி பாரம்பரியக் கிராமியக் கலைகளை இளையர்களிடம் கொண்டுசேர்க்க TikTok சவாலும் உண்டு.

காணொளியில் இடம்பெற்ற இளம் கலைஞர்கள் பாரம்பரியக் கிராமியக் கலைகளைத் தொடர்ந்து கட்டிக்காப்பதன் அவசியத்தைப் பற்றி 'செய்தி'யுடன் பகிர்ந்துகொண்டனர். 

Top