Images
  • kfc chicken
     (படம்: KFC Singapore)

பொங்கோல் வட்டாரத்தில் உள்ள KFC உணவகக் கிளையின் உரிமம் தற்காலிக ரத்து

பொங்கோல் வட்டாரத்தில் உள்ள KFC உணவகக் கிளையின் உரிமம் இரண்டு வாரங்களுக்கு ரத்துசெய்யப்பட்டுள்ளதாகச் சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.

Oasis Terraces கடைத்தொகுதியில் அமைந்துள்ள கிளையின் செயல்பாடுகள் நேற்றிலிருந்து இம்மாதம் 19-ஆம் தேதி வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

கிளையின் உரிமையாளருக்கு 800 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

கடந்த ஓராண்டில் அங்கு சுத்தமில்லாத அல்லது வேறு பொருள் கலந்த உணவை விற்பனை செய்ததன் தொடர்பில் இரண்டு குற்றங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அமைப்பு கூறியது.

அதற்காக 12 குற்றப்புள்ளிகள் விதிக்கப்பட்டன.

12 அல்லது அதற்கும் அதிகமான குற்றப்புள்ளிகளைப் பெறும் உணவகங்களின் உரிமம் 2 அல்லது 4 வாரங்களுக்கு நிறுத்திவைக்கப்படலாம் அல்லது முழுமையாக ரத்துசெய்யப்படலாம். 

Top