Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இயற்கை நிலவனப்புப் பராமரிப்புப் பணிகளில் ஈடுபடவுள்ள பொங்கோல் குடியிருப்பாளர்கள்

அக்கம்பக்க வட்டார இயற்கை நிலவனப்புப் பராமரிப்புப் பணிகளில், குடியிருப்பாளர்களை வேலைக்கு அமர்த்தும் புதிய திட்டம் பொங்கோலில் தொடங்கவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
இயற்கை நிலவனப்புப் பராமரிப்புப் பணிகளில் ஈடுபடவுள்ள பொங்கோல் குடியிருப்பாளர்கள்

(கோப்புப் படம்: Facebook/NParks)

அக்கம்பக்க வட்டார இயற்கை நிலவனப்புப் பராமரிப்புப் பணிகளில், குடியிருப்பாளர்களை வேலைக்கு அமர்த்தும் புதிய திட்டம் பொங்கோலில் தொடங்கவிருக்கிறது.

தேசியப் பூங்காக் கழகத்தின் அந்த முயற்சி, Punggol Waterway, பொங்கோல் பூங்கா ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள இடங்களில் முதலில் தொடங்கும்.

பிறகு அங் மோ கியோ (Ang Mo Kio), யீஷூன் (Yishun) வட்டாரங்களுக்குத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

ஆனால், தனித்துவமான பணியாளர் குழுவை நிர்வகிப்பதில் சவால்கள் இருக்கும் என்று நிலவனப்பு நிறுவனங்கள் கூறின.

கடந்த 5 ஆண்டுகளாக, செடிகளை வெட்டுதல், வடிவமைத்தல், களையெடுத்தல்...
முதலிய வேலைகளை, புக்கிட் பாஞ்சாங் (Bukit Panjang) குடியிருப்பாளர்கள் செய்து வருகின்றனர்.

அதை முன்மாதிரியாக வைத்தே பொங்கோலில் திட்டம் தொடங்கவிருக்கிறது.

பகுதிநேர அடிப்படையில், குடியிருப்பாளர்களில் 50 பேரைத் தோட்டக்காரர்களாக வேலைக்கு அமர்த்துத் திட்டமிடப்படுகிறது.

வகுப்புகளில் கற்பிக்கப்படும் பாடங்கள், நேரடிப் பயிற்சிகள் ஆகியவற்றின் மூலம் அவர்கள் திறன்களை வளர்த்துக்கொள்வர்.

குடியிருப்புத் தோட்டக்காரராகப் பணியில் சேர, பொதுமக்கள் இப்போது பதிவு செய்யலாம்.
திட்டம், அடுத்த மாதம் தொடங்கும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்