Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

$35 மில்லியன் மோசடி செய்த மாதிற்குச் சிறை

ஐந்தாண்டு காலமாக 53 பேரிடம் 35 மில்லியன் வெள்ளி மோசடி செய்த மாதிற்கு 14 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூர்: ஐந்தாண்டு காலமாக 53 பேரிடம் 35 மில்லியன் வெள்ளி மோசடி செய்த மாதிற்கு 14 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

55 வயது லியோங் லாய் யீ தம்மீதான 857 குற்றச்சாட்டுகளில் 51 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

முன்னாள் சொத்து முகவராக இருந்த அவர் தம்மிடம் முதலீடு செய்யுமாறு கூறி நண்பர்களை ஏமாற்றியிருக்கிறார்.

குறைந்த விலையில் சொத்துகளை வாங்கி அவற்றைக் கூடுதல் லாபத்திற்கு விற்றுத்தருவதாகக் கூறியிருக்கிறார். புதிய நிறுவனங்களில் முதலீடு செய்து மாத அடிப்படையில் நல்ல வருமானம் ஈட்டுவதாகக் கூறி மோசடி செய்தார்.

ஏமாற்றிப் பெற்ற பணத்தை கடன்களை அடைக்கவும் சொந்தச் செலவுக்கும் பயன்படுத்தியிருக்கிறார்.

மாதின் செயல்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் அவர் தாய்லந்துக்குத் தப்பியோடினார். 107 பேர் அவர்மீது புகார் செய்ததைத் தொடர்ந்து அவர் ஈராண்டுகளுக்குப் பிறகு பேங்காக்கின் சிங்கப்பூர்த் தூதரகத்தில் சரணடைந்தார்.

ஒவ்வொரு மோசடிக் குற்றச்சாட்டுக்கும் லியோங்கிற்கு 10 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கலாம்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்