Images
  • Pope Francis Lift
    (படம்: REUTERS/Remo Casilli)

ஆசியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் போப் பிரான்சிஸ்

போப் பிரான்சிஸ், வரும் நவம்பர் மாதம் ஆசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளார்.

முதலில் தாய்லந்துக்கும், பிறகு ஜப்பானுக்கும் செல்லவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

போப் ஒருவர் இதற்கு முன் தாய்லந்துக்குச் சென்றது, 1984ஆம் ஆண்டில். 

தாய்லந்தில், பெண்கள் பள்ளி ஒன்றில் பணியாற்றும் தமது உறவினரைபோப் பிரான்சிஸ் சந்திக்கவிருக்கிறார்.

பிறகு அவர், ஜப்பானின் ஹிரோஷிமா, நகசாக்கி, தோக்கியோ நகர்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார்.

5 ஆண்டு முன், பொறுப்பேற்ற பிறகு அவர் ஆசியாவுக்கு இரு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

Top