Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் துறைமுகங்கள்..சில தகவல்கள்

நகரத் துறைமுகங்களின் சேவைகள் 2027-இலும் பாசிர் பாஞ்சாங் துறைமுகத்தின் சேவைகள் 2040-இலும் துவாஸ் முனையப் பெருந்துறைமுகத்திற்கு மாற்றப்படும் என்று பிரதமர் லீ சியென் லூங் தேசிய தினக் கூட்ட உரையில் கூறினார்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் துறைமுகங்கள்..சில தகவல்கள்

(படம்: MPA)

நகரத் துறைமுகங்களின் சேவைகள் 2027-இலும் பாசிர் பாஞ்சாங் துறைமுகத்தின் சேவைகள் 2040-இலும் துவாஸ் முனையப் பெருந்துறைமுகத்திற்கு மாற்றப்படும் என்று பிரதமர் லீ சியென் லூங் தேசிய தினக் கூட்ட உரையில் கூறினார்.

19ஆம் நூற்றாண்டில் துறைமுக நகரமாகத் தொடங்கிய நவீன சிங்கப்பூர், அதன் துறைமுகங்களுக்குப் பல மாற்றங்களைச் செய்துவருகிறது.

சிங்கப்பூரின் துறைமுகங்கள் பற்றிய சில தகவல்கள்:

-1852-இல் தஞ்சோங் பகாரில் கப்பல்களை நிறுத்தவும் சரக்கை இறக்கவும் இடம் அமைக்கப்பட்டது.

-1972-இல் கொள்கலச் சேவைகள்கொண்ட துறைமுகமாக அது மாற்றப்பட்டது.

-1991க்குள், தஞ்சோங் பகார் துறைமுகம் ஆண்டுக்கு 6 மில்லியன் தொகுதியளவு (20 அடி நீள கொள்கலன்) சரக்கைக் கையாண்டது.

(படம்: AFP)

- அப்போது கொள்கலன்கள் வழியாகச் செய்யப்படும் வர்த்தகம் அதிகரித்து வந்ததால், தஞ்சோங் பகார் துறைமுகத்தில் கூடுதல் கொள்கலன்கள் வைப்பதற்கான வசதிகள் இல்லை.

-2000-இல் கொள்கலன் சேவைகளுடன் பாசிர் பாஞ்சாங் துறைமுகம் திறக்கப்பட்டது. அங்கு நிலமீட்பு முறை பயன்படுத்தப்பட்டு துறைமுகம் அமைக்கப்பட்டது.

(படம்: AFP/Roberto Coloma)

- பாசிர் பாஞ்சாங் துறைமுகம் 36 மில்லியன் தொகுதியளவு சரக்கைக் கையாளும் செயல்திறன் கொண்டது.

-கடந்த ஆண்டு, அந்த அளவை மிஞ்சிய சரக்கைக் கையாண்டது துறைமுகம் .

- 2017-இல் தஞ்சோங் பகார் துறைமுகத்தின் சேவைகள் பாசிர் பாஞ்சாங் துறைமுகத்திற்கு மாற்றப்பட்டு, தஞ்சோங் பகார் துறைமுகம் மூடப்பட்டது.

- 2027-இல் செயல்படத் தொடங்கும் துவாஸ் முனையப் பெருந்துறைமுகத்தால் ஆண்டுக்கு 65 மில்லியன் தொகுதியளவு சரக்கைக் கையாளமுடியும்.

(படம்: AFP)

- துவாஸ் முனையத்தில் அனைத்துக் கொள்கலன் சேவைகளும் ஒருங்கிணைக்கப்பட்ட பின்னர் மற்ற துறைமுகங்கள் கட்டங்கட்டமாக மூடப்படவுள்ளன.

- இதனால் துறைமுகங்கள் அமைந்திருக்கும் நிலத்தை Greater Southern Waterfront மறுமேம்பாட்டு திட்டத்திற்குப் பயன்படுத்தமுடியும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்