Images
  • export trade
    (படம்: AFP)

சிங்கப்பூர்த் துறைமுகம் கையாண்ட கொள்கலன்களின் எண்ணிக்கை பத்தாண்டுகள் காணாத உச்சம்

சிங்கப்பூர்த் துறைமுகத்தில் கடந்த ஆண்டு கையாளப்பட்ட கொள்கலன்களின் எண்ணிக்கை பத்தாண்டுகளில் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகக் கடல் துறை, துறைமுக ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சிங்கப்பூரில்...

- சுமார் 37 மில்லியன் 20 அடி தொகுதிக் கொள்கலன்களைக் கையாளப்பட்டன.

- ஏறக்குறைய 2.8 பில்லியன் டன் சரக்குகள் இறக்கப்பட்டன.

- கப்பல்களுக்கு 47 மில்லியன் டன் மதிப்புள்ள எண்ணெய் நிரப்பப்பட்டது.

சிங்கப்பூர் தொடர்ந்து, கப்பல்களுக்கு எண்ணெய் நிரப்பும் முக்கியத் தளமாக திகழ்கிறது .

கடந்த ஆண்டு சவால் மிகுந்ததாய் இருந்தது என்று போக்குவரத்து மூத்த துணையமைச்சர் லாம் பின் மின் (Lam Pin Min) கூறினார்.

மந்தமான அனைத்துலகப் பொருளியல் சூழலையும், அமெரிக்க - சீன வர்த்தகப் போரையும் அவர் சுட்டினார்.

இருப்பினும், சிங்கப்பூர் எந்நேரமும் தயார் நிலையில் இருந்ததாக அவர் பாராட்டினார்.  

Top