Images
  • poster
    (படம்: Facebook/Progress Singapore Party)

பொதுத் தேர்தல் நேரத்தில் கட்சிகளின் விளம்பரத் தட்டிகளை சேதம் செய்த இருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது

சிங்கப்பூரில் அண்மைப் பொதுத்தேர்தலின்போது கட்சிகளின் விளம்பரத் தட்டிகளைச் சேதம் செய்த இருவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

குற்றம் சுமத்தப்பட்ட இருவரும் மக்கள் செயல் கட்சி, சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி ஆகியவற்றின் தேர்தல் விளம்பரத் தட்டிகளைச் சேதம் செய்தது அல்லது அகற்றியது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

லிம் சாங் ஹூவாட் என்னும் 48 வயது ஆடவர் மீது 3 குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

அவர் மக்கள் செயல் கட்சியின் 3 தட்டிகளுக்குச் சேதம் ஏற்படுத்தினார்.

மற்றோர் ஆடவர் புக்கிட் பாத்தோக்கில் இருந்த சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் 2 தட்டிகளைச் சேதப்படுத்தினார்.

இருவரும் வரும் ஜனவரி மாதம் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்வர் என்று கூறப்பட்டது.

தேர்தல் நேரத்தில் கட்சிகளின் விளம்பரத் தட்டிகளுக்குச் சேதம் விளைவிப்போருக்கு ஓர் ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையோ, 1,000 வெள்ளி வரையிலான அபராதமோ,இரண்டுமோ விதிக்கப்படலாம்.

 

Top