Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சாலைகளில் குழிகள் எப்படி உருவாகின்றன?

சிங்கப்பூர் சாலைகளில் மேலும் அதிகமான குழிகள் தோன்றியுள்ளன.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் சாலைகளில் மேலும் அதிகமான குழிகள் தோன்றியுள்ளன.

கடந்த ஆண்டின் மாதாந்தரச் சராசரியுடன் ஒப்பிடுகையில், ஜனவரியில் இரட்டிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

சாலைகளில் குழிகள் எப்படி உருவாகின்றன?

குழிகள், வாகனப் போக்குவரத்தாலும் தண்ணீராலும் உருவாகின்றன.

  • சாலைகள் பொதுவாக பல அடுக்குகளாகக் போடப்படுகின்றன. சாலையின் மேல்அடுக்கு, தண்ணீர் உட்புகாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மழை பெய்தாலும்,
  • மழைநீர் சாலை ஓரத்தில் உள்ள வடிகாலுக்கு வடிந்து செல்லும்வகையில் நடுவிலிருந்து ஓரத்தை நோக்கிச் சற்றே சரிவாக அமைக்கப்படுகின்றன.
  • சூரிய வெப்பத்தால், சாலைகள் பகலில் விரிவடைவதுண்டு. இரவு நேரத்தின்போது சாலைகள் சுருங்குகின்றன. இவ்வாறு மாறி மாறிச் சுருங்கி விரிவதால், சாலைகளில் விரிசல்கள் ஏற்படுகின்றன. அதிகமான வாகனங்கள் சாலையில் செல்வதாலும் அவ்வாறு நேர்வதுண்டு.
  • சின்ன விரிசல்களக இருந்தாலும் அவற்றின் உள்ளே தண்ணீர் புகுந்து இறங்கும். இரவு நேரக் குளிர்ச்சி காரணமாக, உள்ளே புகுந்த தண்ணீர் உறைந்து விரிவடையும்.
  • பகலில் அந்த ஐஸ் உருகும்போது, சாலைகள் சுருங்குகின்றன. அப்போது சாலையின் கீழ் அடுக்கில் உள்ள இடைவெளி அதிகரிக்கிறது. கூடுதலான தண்ணீர் உள்ளே நுழைவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
  • அண்மை நாள்களில் சிங்கப்பூரில் தொடர்ந்து மழை பெய்ததால், கூடுதலான தண்ணீர் உள்ளே சென்றிருக்கும்.
  • சாலைப் போக்குவரத்து மூலம் ஏற்படும் அழுத்தம் விரிசல்களை மேலும் விரியச் செய்கிறது.
  • அதனால், சாலையின் மேற்பரப்பு வலுவிழக்கிறது. வலுவிழந்த பகுதி, பின்னர் உடையத் தொடங்குகிறது. தொடர் சாலைப் போக்குவரத்தால், உடைந்துபோன பகுதிகள் சிதறுகின்றன.
  • சாலை உடைந்த இடங்கள், பின்னர் குழிகளாக மாறிவிடுகின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்