Images
  • power cut (1)
    (படம்: Mediacorp)

மின் நிலையத்தின் மின்மாற்றியில் ஏற்பட்ட கோளாறே கடந்த மாதம் ஏற்பட்ட மின்தடைக்குக் காரணம்: முதற்கட்ட விசாரணை

சிங்கப்பூரின் சில பகுதிகளில் கடந்த மாதம் 26ஆம் தேதி ஏற்பட்ட மின்தடைக்கு பிரைட் ஹில் துணை மின் நிலையத்தின் மின்மாற்றியில் ஏற்பட்ட கோளாறே காரணம் என்று எரிசக்திச் சந்தை ஆணையம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

வர்த்தக, தொழில் அமைச்சுக்கான மூத்த துணையமைச்சர் டாக்டர் கோ போ கூன் அது குறித்து இன்று நாடாளுமன்றத்தில் பேசினார்.

மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது காரணமாகத் துணை மின் நிலையத்தில் தீ மூண்டதாக அவர் தெரிவித்தார்.

மற்ற சாதனங்கள் பாதிக்கப்படாமல் இருக்க மின்மாற்றியைச் சுற்றி மின்சாரப் பாதுகாப்புச் சாதனங்கள் செயல்படுத்தப்பட்டன.

அதன் காரணமாக மின்தடை ஏற்பட்டது.

அங் மோ கியோ, பீஷான், தோ பாயோ ஆகிய வட்டாரங்களில் உள்ள சுமார் 27,000 பயனீட்டாளர்கள் அதனால் பாதிக்கப்பட்டனர் என்று டாக்டர் கோ குறிப்பிட்டார். 

Top