Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

எரிசக்திப் பயன்பாட்டைக் குறைக்கச் சில வழிகள்

சிங்கப்பூர் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. 

வாசிப்புநேரம் -
எரிசக்திப் பயன்பாட்டைக் குறைக்கச் சில வழிகள்

படம்: Pixabay

சிங்கப்பூர் பருவநிலை மாற்றத்தை உணரத் தொடங்கிவிட்டது என்றும் அதன் தாக்கத்தைக் கட்டுப்படுத்தத் தனிமனிதர்களும் பங்காற்றலாம் என்றும் பிரதமர் லீ சியென் லூங் தேசிய தினக் கூட்ட உரையில் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க உதவலாம். அதற்கு நம் வீட்டின் எரிசக்திப் பயன்பாட்டைக் குறைக்கலாம்.

1. சலவை இயந்திரம் முழுமையாக நிரம்பும் அளவிற்குத் துணிகள் சேர்ந்த பிறகே, இயந்திரத்தைப் பயன்படுத்தவேண்டும்.

2. மின்னிலக்கத் தொலைக்காட்சியில் 'vivid', 'standard' எனும் காட்சித் தெரிவுகள் உள்ளன. அதில் 'standard' காட்சியைத் தெரிவு செய்யவேண்டும். 'vivid' தெரிவு, 20 விழுக்காட்டு மின்சாரத்தைக் கூடுதலாகச் செலவிடும்.

3. கணினியில் செயலற்ற காலக்கட்டம் 15 நிமிடங்களைத் தாண்டினால், திரையின் காட்சி சுயமாக மறைந்துவிடும்படி அமைக்கவேண்டும்.

4. எரிசக்திச் சேமிப்பு விளக்குகளுக்கு மாறவேண்டும்.

5. எரிசக்தியைச் சேமிக்கும் தன்மை உள்ள வீட்டு உபயோகச் சாதனங்களைப் பயன்படுத்தலாம்.

6. வெந்நீர்க் கலன், சொந்தமாக அணைந்துவிடும் தன்மை கொண்டிருப்பது நல்லது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்