Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

திருவாட்டி ஹலிமாவுக்கு சிங்கப்பூர் முஸ்லிம் மகளிர் அமைப்பு வாழ்த்து

PPIS எனப்படும் சிங்கப்பூர் முஸ்லிம் மகளிர் அமைப்பு, திருவாட்டி ஹலிமாவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
திருவாட்டி ஹலிமாவுக்கு சிங்கப்பூர் முஸ்லிம் மகளிர் அமைப்பு வாழ்த்து

(படம்: சேனல் நியூஸ்ஏஷியா)

PPIS எனப்படும் சிங்கப்பூர் முஸ்லிம் மகளிர் அமைப்பு, திருவாட்டி ஹலிமாவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

திருவாட்டி ஹலிமா, பொதுச்சேவைத் துறையில் 40 ஆண்டு அனுபவம் மிக்கவர். அதேவேளையில், சமூக அமைப்புகளுடன் துடிப்புமிக்க வகையில் தொடர்புகொண்டிருந்தார் என்று அமைப்பு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டது.

அந்த நடவடிக்கைகள்தான் திருவாட்டி ஹலிமாவை ஒரு தலைவராகச் செதுக்கியவை; தாம் பிரதிநிதிக்கும் மக்களுடன் நல்ல பிணைப்பைக் கொண்டிருப்பவர் அவர் என்று அமைப்பு கூறியது.

திருவாட்டி ஹலிமா, கடந்த 13 ஆண்டாகச் சிங்கப்பூர் முஸ்லிம் மகளிர் அமைப்பின் புரவலராகத் திகழ்கிறார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்