Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நிரந்தரவாசத்துக்கான விண்ணப்பத்தில் பொய்த் தகவல் கொடுத்த பெண்ணிற்குச் சிறை

நிரந்தரவாசத் தகுதி பெறுவதற்கான விண்ணப்பத்தில் பொய்த் தகவல்களைக் குறிப்பிட்ட பெண்ணிற்கு 7 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
நிரந்தரவாசத்துக்கான விண்ணப்பத்தில் பொய்த் தகவல் கொடுத்த பெண்ணிற்குச் சிறை

படம்: குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம்

நிரந்தரவாசத் தகுதி பெறுவதற்கான விண்ணப்பத்தில் பொய்த் தகவல்களைக் குறிப்பிட்ட பெண்ணிற்கு 7 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பீன்ஸைச் சேர்ந்த 38 வயது டீ லூனா நோரிசா என்ற பெண்
2008, 2009ஆம் ஆண்டுகளில் நிரந்தரவாசத் தகுதி பெறுவதற்கு, குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்திடம் விண்ணப்பித்தார்.

விண்ணப்பத்தில் குறிப்பிட்ட தகவல்களைச் சரிபார்த்த அதிகாரிகள் அவற்றுள் சில பொய்யானவை என்பதைக் கண்டுபிடித்தனர்.

நோரிசா மனிலாவில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில் படித்ததாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் உண்மையில் அவர் அங்கு படிக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு நோரிசா கைது செய்யப்பட்டார்.

அதன்பிறகு நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து நோரிசாவுக்கு இன்று தண்டனை விதிக்கப்பட்டது.

நிரந்தரவாசத் தகுதி பெறுவதற்கான விண்ணப்பத்தில் பொய்த் தகவல்களைக் குறிப்பிட்டால் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் எச்சரித்தது.

நிரந்தரவாசம் பெற்ற பிறகு தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டாலும்கூட அவர்களின் குடியேற்றத் தகுதி பறிக்கப்படலாம்.

குடிநுழைவுச் சட்டத்தின்கீழ் தண்டிக்கப்படுவோரின் குடும்ப உறுப்பினர்களின் குடியேற்றத் தகுதியும் ஆணையத்தால் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்