Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மேலும் பல விருதுகளுடன் "பிரதான விழா 2021"

வசந்தம் ஒளிவழியின் "பிரதான விழா" விருது நிகழ்ச்சி மீண்டும் வந்துவிட்டது.

வாசிப்புநேரம் -
மேலும் பல விருதுகளுடன் "பிரதான விழா 2021"

(படம்: mediacorp.sg/pradhanavizha)

வசந்தம் ஒளிவழியின் "பிரதான விழா" விருது நிகழ்ச்சி மீண்டும் வந்துவிட்டது.

அடுத்த மாதம் 27ஆம் தேதி அது நடைபெறவுள்ளது.

பிரதான விழா 2021இல் இந்த முறை 31 விருதுகள் வழங்கப்படும்.

17ஆவது முறையாக நடைபெறும் விருது நிகழ்ச்சியில் முதல் முறையாக, சிறந்த வானொலி நிகழ்ச்சி பிரிவு இணைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இதற்குமுன் இருந்த 2 பிரிவுகள் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளன.

திரைக்குப் பின்னால் இருக்கும் திறனாளர்களை அங்கீகரிக்கும் விதமாக சிறந்த தொழில்நுட்ப விருது அவற்றில் ஒன்று.

சென்ற முறை இடம்பெறாத, பிரபல ஆண், பெண் நட்சத்திர விருதுகள் மற்றொன்று.

விருது பற்றிக் கூடுதல் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார், இந்திய சமூகப் பிரிவு வசந்தம், ஒலி 96.8இன் தலைவர் சபநிதா சண்முகசுந்தரம்.

"இவ்வாண்டு வானொலி அதன் 85-ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இந்நிலையில் பிரதான விழா, வானொலி படைப்பாளர்களைக் கொண்டாடுவதற்கு நல்ல வாய்ப்பாக இருக்கும். இந்தக் இக்கட்டான சூழலில், பிரதான விழா, துறை சார்ந்த அனைவருக்கும் ஊக்கம் அளிப்பதற்கும் நன்றி தெரிவிக்கவும் நல்ல தளமாக அமையும்." என்று அவர் சொன்னார்.

கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகள் காரணமாக, பார்வையாளர்கள் இன்றி விருது நிகழ்ச்சி இந்த முறை நடைபெறவுள்ளது.

"பிரதான விழா 2021" விருது நிகழ்ச்சியை, வசந்தம் ஒளிவழி, meWATCH, Mediacorp Entertainment on Youtube ஆகிய தளங்களில் நேரடியாகக் காணலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்