Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19 முன் பரிசோதனை - எப்படி? எதற்காக? யாருக்கு?

சிங்கப்பூரில் அடுத்த மாதம் முதல் திருமணங்கள், திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள், நேரடி நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவற்றில் அதிகமானோர் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படும்.

வாசிப்புநேரம் -
COVID-19 முன் பரிசோதனை - எப்படி? எதற்காக? யாருக்கு?

(படம்: AFP/Roslan Rahman)

சிங்கப்பூரில் அடுத்த மாதம் முதல் திருமணங்கள், திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள், நேரடி நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவற்றில் அதிகமானோர் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படும்.

ஆனால் கலந்துகொள்வோர் Pre-Event Testing (PET) என்கின்ற COVID-19 முன் பரிசோதனையைச் செய்துகொண்டால் மட்டுமே அதிகமானோர் கலந்துகொள்ளலாம்.

அப்படி என்றால் என்ன?

சில நிகழ்ச்சிகள் நடைபெறும் வளாகத்தினுள் நுழைய விரும்புவோர், COVID-19 முன் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள், அவர்களுக்குக் கிருமித்தொற்று இல்லை என்று உறுதியான பின்னரே, அவர்கள் வளாகத்தினுள் அனுமதிக்கப்படுவர்.

எதற்காக?

COVID-19 முன் பரிசோதனை, கிருமிப்பரவல் அபாயத்தைக் குறைக்கிறது.

அதோடு, அதிகமானோர் கலந்துகொள்ளக்கூடிய நிகழ்ச்சிகள் தொடரவும் அது வழிவகுக்கிறது.

யாரெல்லாம் பரிசோதிக்கப்படத் தேவையில்லை?

தடுப்பூசியை 2 முறை போட்டுக்கொண்டு, குறைந்தது 2 வாரங்களாகியவர்கள், COVID-19 முன் பரிசோதனையை மேற்கொள்ளத் தேவையில்லை.

ஏற்கனவே COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமாகியவர்களும் பரிசோதனையிலிருந்து விலக்கப்படலாம். அது குறித்த மேல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

எப்போது பரிசோதிக்கப்பட வேண்டும்?

COVID-19 பரிசோதனை முடிவுகள், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதிலிருந்து 24 மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.

அதனால், நிகழ்ச்சி தொடங்குவதற்கு அதிகபட்சமாக 24 மணி நேரத்திற்கு முன் பரிசோதனையை மேற்கொள்ளலாம்.

எந்தப் பரிசோதனை?

Antigen Rapid Test பரிசோதனையை மேற்கொள்ளுமாறு மக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். (மூக்கிலிருந்து திரவத்தை எடுத்துச் சோதிக்கும் முறை)

அதன் விலையும் மலிவு, முடிவுகளும் விரைவாகக் கிடைத்துவிடும்.

எங்கே பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்?

அது குறித்த விவரங்கள் அடுத்த மாதம் வெளியிடப்படும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்