Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சர்ச்சைக்குரிய காணொளியை வெளியிட்ட ப்ரீத்தி நாயரும் சுபாஸ் நாயரும் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ளனர்

YouTube பிரபலம் Preetipls-உம், அவரது சகோதரர் சுபாஸ் நாயரும் தாங்கள் வெளியிட்டிருந்த காணொளி தொடர்பில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
சர்ச்சைக்குரிய காணொளியை வெளியிட்ட ப்ரீத்தி நாயரும் சுபாஸ் நாயரும் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ளனர்

காணொளிலிருந்து எடுக்கப்பட்ட படம்

YouTube பிரபலம் Preetipls-உம், அவரது சகோதரர் சுபாஸ் நாயரும் தாங்கள் வெளியிட்டிருந்த காணொளி தொடர்பில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுள்ளனர்.

இருவரும் Facebookஇல் அவ்வாறு பதிவிட்டுள்ளனர்.

தாங்கள் மன்னிப்புக் கேட்பதாகவும், இருப்பினும் அதற்கும் மேலாகச் செய்யவேண்டியது இருப்பதாகவும் இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.

தங்களது காணொளியால் மக்கள் பாதிக்கப்பட்டதால் தாங்கள் மனமார மன்னிப்புக் கோருவதாகவும், இனி அவ்வாறு காணொளி தயாரிக்க நேர்ந்தால் தங்களது அணுகுமுறையை மாற்றிக்கொள்ளவும், தங்கள் எண்ணங்களை மேம்பட்ட முறையில் வெளிப்படுத்தவும் அவர்கள் உறுதியளித்தனர்.

இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக அவர்களது மன்னிப்பு அறிக்கை வெளியாகியிருக்கிறது.

நேற்று வெளியிட்ட மன்னிப்பு போலியாகவும், மனமார்ந்த ஒன்றாகவும் இல்லை என்று உள்துறை அமைச்சு குறைகூறியதையடுத்து இன்று இரண்டாவது மன்னிப்பு அறிக்கை வெளியானது.

Havas நிறுவனம் NETSஇன் மின்-கட்டணம் தொடர்பில் வெளியிட்ட விளம்பரத்தை விமர்சனம் செய்து பிரீத்தியும், சுபாஸும் வெளியிட்ட காணொளி சர்ச்சைக்குள்ளானது.

விளம்பர நிறுவனத்தின் மன்னிப்பு அறிக்கையைக் கேலி செய்யும் விதமாக அமைந்திருப்பதாய் அமைச்சு சுட்டியது.

அதைத் தொடர்ந்து இன்று அவர்களது இரண்டாவது மன்னிப்பு வெளியானது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்