Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மற்ற இனத்தவரை இழிவுபடுத்தும் Preetiplsஇன் Rap காணொளி எல்லை மீறிவிட்டது - அமைச்சர் சண்முகம்

பல்லின மக்களைப் பிரதிபலித்துச் சீன நடிகர் பங்குபெற்ற விளம்பரத்துக்கு எதிரான  காணொளி குறித்து சிங்கப்பூர்க் காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.

வாசிப்புநேரம் -
மற்ற இனத்தவரை இழிவுபடுத்தும் Preetiplsஇன் Rap காணொளி எல்லை மீறிவிட்டது - அமைச்சர் சண்முகம்

கோப்புப் படம்: CNA

பல்லின மக்களைப் பிரதிபலித்துச் சீன நடிகர் பங்குபெற்ற விளம்பரத்துக்கு எதிரான காணொளி குறித்து சிங்கப்பூர்க் காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.

இணையத்தில் பரவிய காணொளியில் மனத்தைப் புண்படுத்துகிற கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகப் புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

NETS நிறுவனத்தின் மின்-கட்டணச் செயலியான E-Payயைப் பிரபலப்படுத்த HAVAS Worldwide நிறுவனம் ஒரு விளம்பரத்தைத் தயாரித்தது.

மீடியாகார்ப் பிரபலம் டென்னிஸ் சியூ (Dennis Chew) அதில் நான்கு வேடங்களைப் பூண்டிருந்தார்.

மலாய் மாது, இந்திய ஆடவர், சீன இளம்பெண், மீசை வைத்த சீன ஆடவர் ஆகியவை அவை.

அந்த விளம்பரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நேற்று (ஜூலை 29) Rap பாடலுடன் ஒரு காணொளி இணையத்தில் பதிவிடப்பட்டது.

உள்துறை அமைச்சர் கா சண்முகம், அந்தக் காணொளி எல்லை மீறிய ஒன்று என்றும், அது போன்ற செயல்களை அதிகாரிகள் ஒருபோதும் சகித்துக்கொள்வதில்லை என்றும் கூறினார்.

சீன சிங்கப்பூரர்கள் மீது சிறுபான்மையினர் சினம் கொள்ளத் தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட காணொளியில், தரங்குறைந்த வார்த்தைகளும் சைகைகளும் இடம்பெற்றுள்ளன.

அது ஏற்றுக்கொள்ளமுடியாத செயல் என்றார் திரு. சண்முகம்.

தனக்குப் பிடிக்காத ஒன்றை எதிர்ப்பதற்காக அவ்வாறு செய்வதை ஒப்புக்கொள்ளமுடியாது. அப்படி ஏதாவது இருந்தால் மன்னிப்பு கோரச் சொல்லலாம்; காவல்துறையிடம் புகார் அளிக்கலாம்; அப்படியின்றி எல்லை மீறிய செயல்களில் ஈடுபடக்கூடாது என்றார் அமைச்சர்.

ஒரு காணொளியை அனுமதித்தால், பின்னர் அதுபோன்ற நூற்றுக்கணக்கான காணொளிகள் வெளிவரலாம்.

மற்ற சமயங்களை, இனங்களை இழிவுபடுத்தும் அத்தகைய காணொளிகளால் சிங்கப்பூரின் இன நல்லிணக்கம் பாதிக்கப்படும் என்றார் திரு. சண்முகம்.

அரசாங்கம் அதனை அனுமதிக்காது என்றார் அவர்.

விளம்பரத்துக்கு முழுப்பொறுப்பு எடுத்துக்கொள்வதாகவும் அதன் தொடர்பில் வெளிப்படையாக மன்னிப்புக் கோருவதாகவும் மீடியாகார்ப் தெரிவித்தது.

இனி அத்தகைய தவறுகள் நிகழாமல் தடுக்கக் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படும் என்று அது குறிப்பிட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்