Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Pfizer-BioNTech தடுப்பூசி போட்டுக்கொண்ட கர்ப்பிணிகள் சிலருக்கு ஆபத்தில்லா பக்கவிளைவுகள் ஏற்பட்டன

சிங்கப்பூரில் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட கர்ப்பிணிகளுக்கு ஏதேனும் பக்கவிளைவு எற்பட்டதா என்பது குறித்து நாடாளுமன்றத்தில் 

வாசிப்புநேரம் -
Pfizer-BioNTech தடுப்பூசி போட்டுக்கொண்ட கர்ப்பிணிகள் சிலருக்கு ஆபத்தில்லா பக்கவிளைவுகள் ஏற்பட்டன

(படம்:Pixabay)

சிங்கப்பூரில் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட கர்ப்பிணிகளுக்கு ஏதேனும் பக்கவிளைவு எற்பட்டதா என்பது குறித்து நாடாளுமன்றத்தில்
கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் எழுத்து மூலம் பதிலளித்தார்.

Pfizer-BioNTech/Comirnaty தடுப்பூசி போட்டுக்கொண்ட கர்ப்பிணிகள் சிலருக்கு ஆபத்தில்லா பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகச் சுகாதார அறிவியல் ஆணையத்திற்குத் தகவல் வந்தது.

அரிப்பு, மயக்கம், தலைசுற்றல், முகத் தசைகளின் தற்காலிக பலவீனம் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டன.

தடுப்பூசி போட்டுக்கொண்ட சாதாரண மக்களுக்கும் அத்தகைய அறிகுறிகள் இருந்தன.

mRNA வகை COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்வதால் கர்ப்பிணிகளுக்கு ஆபத்து வரும் என்பதற்கு எந்தத் தரவுகளோ, ஆதாரங்களோ இல்லை.

சுகாதார அமைச்சும் சுகாதார அறிவியல் ஆணையமும் COVID-19 தடுப்பூசி பாதுகாப்பு தொடர்பில், அனைத்துலக, உள்நாட்டுத் தரவுகளை அணுக்கமாய்க் கவனித்து வருவதாக அமைச்சர் ஓங் தெரிவித்தார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்