Images
  • pres halimah

மனநலப் பிரச்சினையுள்ள மாணவர்களுக்கெனக் கூடுதலான வளங்களும் ஆதரவும் தேவை : அதிபர் ஹலிமா

மனநலப் பிரச்சினையுள்ள மாணவர்களுக்கெனக் கூடுதலான வளங்களும் ஆதரவும் தேவை என்று அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார்.

பள்ளிகளும் மனநலப் பிரச்சினைகளைக் கையாளும் சமூக சேவை அமைப்புகளும் இணைந்து, அதில் பணியாற்றலாம் என்றார் அவர்.

மனநலம்பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் திட்டங்களைப் பள்ளிகள் நடத்த அது உதவும் என்றார் அவர்.

சிங்கப்பூரில், மனநலப் பிரச்சினைகள் கையாளப்படும் அணுகுமுறை, இன்னும் மேம்பட வேண்டும் என்றும் திருவாட்டி ஹலிமா கூறினார்.

எடுத்துக்காட்டாக, அதுபோன்ற பிரச்சினைகளைக் கொண்ட பிள்ளைகளைப் பள்ளியில் இருந்து சிலகாலத்துக்கு விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதிக்கலாம்.

நிபுணத்துவ உதவி, மருந்து ஆகியவற்றை மட்டும் சார்ந்திராமல், பெற்றோர் அந்தப் பிள்ளைகளை வீட்டில் கையாளும் முறையை எளிதாக்கும் திட்டங்கள்பற்றியும் பரிசீலிக்கலாம்.  

Top