Images
  • my first skool
    (படம்:  My First Skool)

பாலர்பள்ளி ஊழியர்கள் மூவருக்குக் கிருமித்தொற்று - தொடர்பில் வந்த பாலர்பள்ளி ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் கட்டாய விடுப்பு

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோரில் மூவர் பாலர்பள்ளி ஊழியர்கள்.

அவர்களில் இருவர் கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் ஏற்பட்ட பின்னரும் வேலைக்குச் சென்றதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அவர்களில் ஒருவர் கேன்பெர்ரா வட்டாரத்தில் உள்ள My First Skool பாலர் கல்வி நிலையத்தைச் சேர்ந்தவர்.

மாற்றொருவர், கம்பாஸ் வட்டாரத்தின் PCF Sparkletots பாலர் பள்ளியைச் சேர்ந்தவர்.

நோய்வாய்ப்பட்ட மூன்றாவது நபரான 34 வயதுப் பெண், நோய்க்கான அறிகுறிகள் தென்பட்ட பிறகு வேலைக்குச் செல்லவில்லை.

முன்னதாக நோய்வாய்ப்பட்டவர்களுடன் அந்த மூவரும் இதுவரை தொடர்புபடுத்தப்படவில்லை.

இம்மாதம் 15 ஆம் தேதியிலிருந்து இதுவரை,
பாலர் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 10,400 ஊழியர்களுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அவர்களில் மூவரிடம் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிக்கப்பட்டோருடன் நேரடித் தொடர்பில் வந்த பாலர் பள்ளி ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் 14 நாள் கட்டாய விடுப்பு கொடுக்கப்படும்படி பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் பணிபுரிந்த பாலர்பள்ளிகள், கிருமிநீக்கப் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளன.

 

Top