Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தலைமைத்துவப் பொறுப்பில் ஆண், பெண் பாகுபாட்டைக் களையும் போக்கை நிறுவனங்கள் தொடரவேண்டும் : அதிபர் ஹலிமா

தலைமைத்துவப் பொறுப்பில் ஆண், பெண் பாகுபாட்டைக் களையும் போக்கை நிறுவனங்கள் தொடரவேண்டும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -

தலைமைத்துவப் பொறுப்பில் ஆண், பெண் பாகுபாட்டைக் களையும் போக்கை நிறுவனங்கள் தொடரவேண்டும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார்.

ஆசியப் பெண்கள் கருத்தரங்கில் கலந்துகொண்ட அவர் அதனைத் தெரிவித்தார்.

தகுதிக்கு முன்னுரிமை, அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கும் கொள்கைகளின் அடிப்படையில் சிங்கப்பூரின் சமூகம் அமைந்துள்ளதை திருவாட்டி ஹலிமா சுட்டினார்.

அரசாங்க, தனியார் துறைகளில் பெண்கள் அதிகளவில் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்கின்றனர் என்ற அவர், வர்த்தக லாபம், நிர்வாகம், புத்தாக்க அணுகுமுறை ஆகியவற்றில் பெண்கள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

ஆசியப் பொருளியல்களைப் பொறுத்தவரை தொழில்முனைப்பில் பெண்களின் ஈடுபாடு தனித்துவம் வாய்ந்த முக்கிய அம்சம் என்று திருவாட்டி ஹலிமா சொன்னார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்