Images
  • President Halimah Yacob
    படம்: Facebook/Halimah Yacob/President's Office

2018 வரவு செலவுத் திட்ட செலவின ஒதுக்கீட்டை அங்கீகரித்த அதிபர் ஹலிமா

நிதி அமைச்சு அதிகாரிகள் ஏற்பாடு செய்த வரவு செலவுத் திட்டம் குறித்த விளக்க உரையில், தம்மோடு அதிபர் ஆலோசனை மன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டதாக அவர் தெரிவித்தார்.

அவர்கள் வழங்கிய சுயேச்சையான ஆலோசனையை ஏற்றே, செலவின ஒதுக்கீட்டைத் தாம் அங்கீகரித்ததாக அவர் கூறினார்.

புதிய நிதியாண்டில், கடந்த காலக் கையிருப்பிலிருந்து நிதி எடுக்கப்படும் சாத்தியம் குறைவே என்று, உறுப்பினர்கள் குறிப்பிட்டதை அதிபர் நினைவுகூர்ந்தார்.

ஒவ்வொரு நிதி ஆண்டிலும் அரசாங்கம் எவ்வளவு செலவிடமுடியும் என்பதை செலவின ஒதுக்கீடு வரையறுக்கிறது.

அதற்கு அதிபரின் ஒப்புதல் தேவை.  அரசாங்கம் தனது நிதியைப் பொறுப்புடன் செலவழிக்கிறது என்பதை உறுதிப்படுத்த, அந்த நடைமுறைகள் அவசியம் என்றார் அதிபர் ஹலிமா.


Top