Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முதலீட்டு ஆதாயங்கள் குறித்த அரசாங்கத்தின் முன்னுரைப்புகள் - அதிபர் பரிசீலனை

அதிபர் ஹலிமா யாக்கோப் முதலீட்டு ஆதாயங்கள் குறித்த அரசாங்கத்தின் முன்னுரைப்புகளை அதிபர் ஆலோசகர் மன்றத்துடன் பரிசீலிக்கவிருப்பதாகக் கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
முதலீட்டு ஆதாயங்கள் குறித்த அரசாங்கத்தின் முன்னுரைப்புகள் - அதிபர் பரிசீலனை

(படம்: Hanidah Amin/ CNA)

அதிபர் ஹலிமா யாக்கோப் முதலீட்டு ஆதாயங்கள் குறித்த அரசாங்கத்தின் முன்னுரைப்புகளை அதிபர் ஆலோசகர் மன்றத்துடன் பரிசீலிக்கவிருப்பதாகக் கூறியிருக்கிறார்.

அடுத்த ஆண்டின் வரவு, செலவுத் திட்டத்தை வரைவதற்கு அந்த முன்னுரைப்புகள் பயன்படுத்தப்படும்.

துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட்டையும், நிதியமைச்சின் அதிகாரிகளையும் அதிபர் ஹலிமா இந்த வாரம் சந்தித்துப் பேசினார்.

சிங்கப்பூர் நாணய வாரியம், அரசாங்க முதலீட்டு நிறுவனங்களான GIC, துமாசிக் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

நிதிச் சந்தை தொடர்பான நீண்டகாலக் கண்ணோட்டங்களை அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

அவ்வாறு கலந்துபேசும் நடைமுறை முக்கியமான ஒன்று என அதிபர் ஹலிமா தமது Facebook பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்துக்கு முன்பாகவும், முதலீட்டு லாபம் குறித்து அரசாங்கமும், முதலீட்டு நிறுவனங்களும் கலந்துரையாடுவது வழக்கம்.

அதில் பொருளியல் விவகாரங்கள் குறித்தும், லாப முன்னுரைப்புகளுக்கான காரணங்கள் குறித்தும் பகிர்ந்துகொள்ளப்பட்டதாய் அதிபர் கூறினார்.

அரசாங்கத்தின் செலவுகள் லாபத்தின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. அதனால் முன்னுரைப்புகள் கவனமாக மதிப்பிடப்படும் என்றார் அவர்.

மொத்த முதலீட்டு லாபக் கட்டமைப்பின் கீழ் அந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

2009ஆம் ஆண்டு அறிமுகமான அந்தக் கட்டமைப்பு, முதலீட்டு நிறுவனங்கள் நீண்டகால அடிப்படையில் எதிர்பார்க்கும் லாபத்தில் 50 விழுக்காடு வரை செலவுசெய்வதற்கு அரசாங்கத்துக்கு அனுமதி வழங்கும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்