Images
  • city of good
    (படம்: City of Good/Facebook)

சிரமமான காலத்திலும் மனிதநேயத்தை மறக்காத 24 தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் அதிபர் தொண்டூழியர் விருது

சிங்கப்பூரில் இன்று 24 தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் அதிபர் தொண்டூழியர் விருதுகள் வழங்கப்பட்டன.

இவ்வாண்டின் விருதுகளுக்காக 236 விண்ணப்பங்கள் கிடைத்ததாகத் தேசியத் தொண்டூழியர் நிலையம் கூறியது.

ஈராண்டுகளுக்கு முன்பைக் காட்டிலும் அது சுமார் 3 மடங்கு அதிகம்.

அதிபர் ஹலிமா யாக்கோப் அந்த விருதுகளை வழங்கினார்.

சிங்கப்பூரர்களின் சிறந்த குணத்தைக் கிருமித்தொற்று வெளிப்படுத்தியிருப்பதாக அதிபர் ஹலிமா கூறினார்.

கடந்த சில மாதங்களாய் மற்றவர்களுக்கு உதவுவதில் சிங்கப்பூரர்கள் அதிக ஆர்வம் காட்டிவருவதை அவர் சுட்டினார்.

சிரமமான காலக்கட்டத்திலும் மனிதநேயம் இருப்பது தமக்கு ஊக்கமளிப்பதாய் அதிபர் சொன்னார்.

Top