Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சுய-உதவிக் குழுக்கள் ஒன்றாகச் செயல்படுவதால் புதிய எண்ணங்கள் உருவாகும்: அதிபர் ஹலிமா

சுய-உதவிக் குழுக்கள் ஒன்றாகச் செயல்படுவதால், புதிய எண்ணங்கள் உருவாகும் என்று அதிபர் ஹலிமா யக்கோப் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
சுய-உதவிக் குழுக்கள் ஒன்றாகச் செயல்படுவதால் புதிய எண்ணங்கள் உருவாகும்: அதிபர் ஹலிமா

(படம்: ஜமுனா சந்தரேசன்)

சுய-உதவிக் குழுக்கள் ஒன்றாகச் செயல்படுவதால், புதிய எண்ணங்கள் உருவாகும் என்று அதிபர் ஹலிமா யக்கோப் கூறியுள்ளார்.

இன்று சிண்டா வளாகத்திற்கு வருகை புரிந்த அதிபர் ஹலிமா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவ்வாறு கூறினார்.

இனம், சமயம் போன்ற வேறுபாடுகளைத் தாண்டி அனைவருக்கும் உதவும் வகையில் திட்டங்களை வகுத்து வருவதைச் சுட்டினார் திருவாட்டி ஹலிமா.

சுய-உதவிக் குழுக்கள் ஒவ்வொரு சமூகத்திற்கும் தேவையான உதவிகளையும் சேவைகளையும் அடையாளம் கண்டு அதற்குத் தகுந்த ஆற்றலைக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

இன்று (ஜனவரி 18) நடைபெற்ற நிகழ்ச்சியில் சிண்டாவின் குடும்பச் சேவை நிலையத்தின் மூலம் பயனடைந்தவர்கள், தொண்டூழியர்கள் ஆகியோரைச் சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் பற்றி அதிபர் அறிந்துகொண்டார்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்