Images
  • pritam

நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு இடங்களைப் பிடிப்பது பாட்டாளிக் கட்சியின் குறிக்கோள்: பிரித்தாம் சிங்

சிங்கப்பூர்: நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு இடங்களைப் பிடிப்பதை பாட்டாளிக் கட்சி குறிக்கோளாகக் கொண்டிருப்பதாய் கட்சியின் தலைவர் பிரித்தாம் சிங் கூறியிருக்கிறார்.

நாடாளுமன்றத்தின் 89 இடங்களில் தற்போது 6 இடங்கள் பாட்டாளிக் கட்சி வசம் உள்ளது. அத்துடன் 3 தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள்.

கட்சியின் வருடாந்தர உறுப்பினர்கள் கருத்தரங்கில் நேற்று (ஜனவரி 13) திரு பிரித்தாம் சிங் பேசினார். எந்த அரசியல் கட்சியானாலும் பெருபான்மையைப் பெற்று, ஆட்சியைப் பிடித்துப், புதிய கொள்கைகளை உருவாக்குவதே நோக்கமாக இருக்க வேண்டும்; ஆனால், தரமான பொறுத்தமான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல்கள் உள்ளது.

அதனால், மூன்றில் ஒரு பங்கு இடங்களைப் பிடிப்பதை "நடுத்தரக் குறிக்கோள்" என்று குறிப்பிட்டதாகத் திரு சிங் சொன்னார்.

பொதுத் தேர்தல் இவ்வாண்டு நடைபெறும் என்ற ஊகங்கள் நிலவுகின்றன. அதனையடுத்துத் திரு சிங் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பாட்டாளிக் கட்சியின் தலைமைப் பொறுப்புகளை திரு லாவ் தியாக் கியாங்கிடமிருந்து திரு பிரித்தாம் சிங் ஏற்றுக்கொண்டார்.
 

Top