Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தனியார் வாடகை வாகன ஓட்டுநர்கள் இம்மாத இறுதிக்குள் அதற்கான உரிமத்தைப் பெற வேண்டும்

சிங்கப்பூரில், தனியார் வாடகை வாகனத்தைக் கொண்டு பயணச் சேவை வழங்கும் ஓட்டுநர்கள், இம்மாத இறுதிக்குள் அதற்கான வாகனம் ஓட்டும் உரிமத்தைப் பெறவேண்டும்.

வாசிப்புநேரம் -
தனியார் வாடகை வாகன ஓட்டுநர்கள் இம்மாத இறுதிக்குள் அதற்கான உரிமத்தைப் பெற வேண்டும்

(படம்: சேனல் நியூஸ்ஏஷியா)

சிங்கப்பூரில், தனியார் வாடகை வாகனத்தைக் கொண்டு பயணச் சேவை வழங்கும் ஓட்டுநர்கள், இம்மாத இறுதிக்குள் அதற்கான வாகனம் ஓட்டும் உரிமத்தைப் பெறவேண்டும்.

நிலப் போக்குவரத்து ஆணையம் அதனை நினைவுறுத்தியுள்ளது.

இதுவரை 'Approval to Drive' எனும் சலுகைத் திட்டத்தின் கீழ், பயணச் சேவைகள் வழங்கி வந்த தனியார் வாடகை வாகன ஓட்டுனர்கள்,

இம்மாத இறுதிக்குள், தனியார் வாடகை வாகன ஓட்டுநருக்கான உரிமத்தைப் பெறவேண்டும் என்று ஆணையம் கூறியது.

ஓட்டுநர்கள் அதற்கான பயிற்சிக்குச் சென்று, சோதனைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னரே, அவர்களுக்கு அந்த உரிமம் வழங்கப்படும்.

அந்த உரிமத்தை இம்மாத இறுதிக்குள் பெறத் தவறுவோர், அடுத்த மாதம் முதல் பயணச் சேவைகள் வழங்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல், தனியார் வாடகை வாகன ஓட்டுநர்கள் அந்த உரிமத்தை இம்மாத இறுதிக்குள் பெறவேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தி வந்துள்ளது.

இதுவரைச் சுமார் 19,000 தனியார் வாடகை வாகன ஓட்டுநர்கள் புதிய உரிமத்தைப் பெற்றுள்ளதாக, ஆணையம் கூறியது.   

கால அவகாசம் முடிவதற்கு இன்னமும் சுமார் ஒருவாரம் இருக்கும் நிலையில், மொத்தம் 17,700 தனியார் வாடகை வாகன ஓட்டுநர்கள் அதற்கான உரிமத்தைப் பெறவில்லை என்றும் ஆணையம் சொன்னது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்