Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் புதிய தனியார் வீடுகளின் விற்பனை 11 மாதங்கள் காணாத உச்சம்

சிங்கப்பூரில் புதிய தனியார் வீடுகளின் விற்பனை 11 மாதங்கள் காணாத உச்சம் 

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் புதிய தனியார் வீடுகளின் விற்பனை 11 மாதங்கள் காணாத உச்சம்

(படம்: CDL)

சிங்கப்பூரில், கடந்த 11 மாதங்களில் முதல்முறையாக சென்ற மாதம் ஆகக் கூடுதலாய் 1,256 புதிய தனியார் வீடுகள் விற்கப்பட்டதாய் நகரச் சீரமைப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

இவ்வாண்டு ஜூலையில் விற்கப்பட்ட வீடுகளைவிட, அது 16.3 விழுக்காடு அதிகம்.

ஆண்டு அடிப்படையில் சென்ற ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிடுகையில் அது 11.9 விழுக்காடு அதிகம்.

COVID-19 நோய்ப்பரவல் காரணமாக பொருளியலும், வேலைச் சந்தையும் பல சவால்களை எதிர்நோக்கும்
நிலையில், புதிய தனியார் வீடுகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது.

"நிச்சயமற்ற பொருளியல் சூழல், ஏற்ற இறக்கமாகக் காணப்படும் பங்குச் சந்தை ஆகியவற்றுக்கு இடையே, பாதுகாப்பாகக் கருதப்படும் சொத்துச் சந்தையில் பெரும்பாலோர் முதலீடு செய்திருக்கலாம்."

என நிபுணர்கள் கருதுகின்றனர்.

சிங்கப்பூரில் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நடப்பில் இருந்த அதிரடித் திட்டம் முடிவடைந்ததும், விற்பனை அதிகரித்ததற்கு ஒரு காரணம் என்று நிபுணர்கள் சுட்டினர்.

எனினும், அடுத்த சில மாதங்களில் புதிய தனியார் வீடுகளின் விற்பனை சற்றே குறையத் தொடங்கும் என அவர்கள் முன்னுரைக்கின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்